BLOG மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி? | How To Make Money With A Blog For Beginners?


 சில வருடங்களுக்கு முன் பிளாக் எழுதுவது என்பது அதிக அளவில் இல்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பிளாக் எழுதுவது என்பது பல பேருக்கு முழு நேர வேலை ஆகிவிட்டது. தற்பொழுது மிக எளிமையாக பத்து நிமிடங்களிலேயே இலவசமாக ஒரு பிளாக்கினை உருவாக்கிவிட முடியும்.

BLOG  மூலமாக எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?

சில பிளாக்கர்கள் ஒரு வருடத்திற்கு பத்து லட்சம் டாலருக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள்.  பல பிளாக்கர்கள் ஒரு வருடத்திற்கு 500 முதல் 1000 டாலர் வரை சம்பாதிக்கிறார்கள். இவர்கள் எந்தவித உத்தியும் இல்லாமல் பிளாக் எழுதியவர்களாக  இருப்பதால் தான் வருடத்திற்கு 500 முதல் 1000 வரை டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.

நீங்கள் பிளாக்கில் பல உத்திகளை கையாண்டு Content  எழுதுவதன் மூலம் வருடத்திற்கு மில்லியன் டாலர் சம்பாதிப்பவர்களின் அளவிற்கு சம்பாதிப்பீர்கள். அவர்கள் தங்கள் பிளாக்கினை பொழுதுபோக்கிற்காக எழுதாமல் அதனை தங்கள் தொழிலாக எடுத்துக்கொண்டு செயல்படுவதால்தான் அவ்வளவு சம்பாதிக்கிறார்கள். அதேபோல் நீங்களும் உங்கள் உழைப்பினை அளிக்க வேண்டும்.

பிளாக்கில் உங்களின் வாழ்க்கை முறையை பற்றி எழுதி பணம் சம்பாதிக்க முடியுமா?

கண்டிப்பாக முடியும். இந்த உலகில் ஏராளமான மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நிகழும் நிகழ்வுகளை பிளாக்கில் எழுதி தங்களுக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

அதே மாதிரி பலர் ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வினை படமாக்கி Youtube-ல்  பதிவேற்றுகின்றனர். இதற்கு Vlog (Video blogger) என்று  பெயர். இதனையே நீங்கள் ஒரு பிளாக் ஆக எழுதப் போகிறீர்கள் அவ்வளவுதான். உங்களால் தினசரி நிகழ்வுகளை படமாக்க முடிந்தால் படமாக்கி யூடியூபிலும் பதிவேற்றலாம்.

உங்களுக்காக சில பிரபலமான பிளாக்கிற்கான தலைப்புகள்:

  • வாழ்க்கை முறை (Lifestyle) 
  • பேஷன் (Fashion)
  • பயணம(Travel) 
  • ஊக்கம் (Motivation)
  • பொழுதுபோக்கு (Entertainment)

இந்த தலைப்புகளை  சார்ந்து  பிளாக் எழுதினால், உங்களுடைய பிளாக்கின் மதிப்பும் உங்களை சுற்றி ஒரு சமூகத்தையும் உருவாக்க முடியும். இதெல்லாம் நீங்கள் எழுதும் முறை மற்றும்  எழுதுவதில் நிலையாக இருத்தல் போன்ற காரணிகளைப் பொருத்து அமையும்.

புதியதாக பிளாக் எழுத  தொடங்குபவர்கள் மனதில் எழும் கேள்வி, "நான் பிளாக்கிங் (blogging) பண்ணலாமா இல்ல வீடியோ பிளாக்கிங் (vblogging)  பண்ணலாமா" என்பதே...

என்னிடம் கேட்டால் இரண்டையும் செய்வது நல்லது என்பேன். Vblogging  பண்ணுவதற்கு அதிக நேரமும்  (Recording , Editing and Publishing )  ஓரளவு பணமும் தேவை. அதே Blogging  பண்ணுவதற்கு குறைந்த நேரமே போதுமானது. ஏனெனில் நீங்கள் எழுத மட்டும் தான் போகிறீர்கள். இருந்தாலும் இந்த இரண்டு முறைகளையும் ஒன்றாக செய்தால் வேகமாக பிளாக்கிற்கு வாடிக்கையாளர்களை வரவழைக்கவும் சீக்கிரமாக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கவும்  முடியும்.

முன்பிருந்த  காலத்தில் பிளாக்கில் Adsense மூலமாக மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஏராளமாக வழிமுறைகள் வந்துவிட்டன. இவைகள் மூலம் முன்பிருந்ததைவிட ஏராளமாக பணம் சம்பாதிக்க முடியும்.

Post a Comment

0 Comments