How to Make Youtube Video From Omegle


 பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் யூடியூப் என்பது சிறந்த இணையதள சம்பாத்திய தலமாக மாறிவிட்டது. ஆனால் தற்போதைய பிரச்சினை என்னவென்று பார்க்கும்போது வீடியோக்களை உருவாக்குவதுதான் யூடியூபில் மிகவும் சிரமமான விஷயம். இதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம் அதற்கு நான் கூறக்கூடிய ஒரே ஒரு பதில் இது சிரமம் என்று கூட கூடிய நபர்கள் கண்டிப்பாக யூடியூபில் வேலைப்பார்க்கும் நபர்களாக இருந்தால் மட்டுமே புரியும். ஒரு பார்வையாளராக இருந்து இவர்களின் கஷ்டங்களை அறிந்துகொள்ள முடியாது.


யூடிபில் பொருத்தவரைக்கும் இன்றைய நிலைமையில் நாம் சிறந்த கிரியேட்டர் ஆக இருந்தாலும் எதிர்காலத்தில் அப்படியே இருக்குமா என்பது சந்தேகம் ஏனென்றால் திடீரென நமது சேனல் புகழின் உச்சியை அடையும் அதே புகழ் ஒரு கட்டத்திற்கு மேல் உச்சியிலிருந்து அடிமட்டம் வரை சென்று விழுந்துவிடும் ஆகையால் வெற்றி தோல்வி என்பது யூட்யூபில் சகஜமாக நடந்து கொண்டிருக்கும் மிக மோசமான சம்பவம் ஆகும்.


இருப்பினும் யூடியூபில் வீடியோக்களை உருவாக்குவதற்கு என்னென்ன எளிமையான வழிகள் இருக்கிறது என்பதை நாம் நன்றாக ஆராய்ந்தால் நாம் அமர்ந்து பேசக்கூடிய வார்த்தைகளை வீடியோவாக எடுத்து அதை யூடியூபில் பதிவேற்றம் அல்லது சிறந்த நகைச்சுவைபாடல்கள் இப்படியும் கூட வீடியோக்களை உருவாக்கி பதிவேற்றம் செய்யலாம்.


ஆனால் இவை அனைத்திலும் மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருந்தால் மட்டுமே அந்த வீடியோவிற்கு பார்வையாளர்கள் வருவார்கள் நமது சேனலும் மேம்படும் நமக்கு தேவையான பணத்தையும் அந்த பார்வையாளர்களின் விளம்பரங்களின் மூலமாக சம்பாதிக்க முடியும் அல்ல பார்வையாளர்களை வரவில்லை என்றால் உங்களுக்கு சம்பாத்தியமும் இல்லை உங்கள் சேனலின் முன்னேற்றமும் இல்லை இதுதான் சாதாரண கோட்பாடு.


இன்றைய மக்களின் ரசனை என்னவென்று இருக்கிறது என்று தேடினால் கண்டிப்பாக பொழுதுபோக்கு அம்சத்தை வெகுவாக விரும்புகிறார்கள். ஒரு காலகட்டத்தில் பொழுது என்பது நாம் வேலை பார்க்கும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக இருந்தது. இன்றைய காலத்தில் பொழுதை எப்படி கடக்கலாம் இது எப்படி சோர்வில்லாமல் நாட்களை கழிப்பது என்று யோசிக்கும் நிலைமைக்கு மக்கள் மாறிவிட்டார்கள் அதை தனக்கு சாதகமாக எவ்வளவோ துறைகள் பயன்படுத்திக்கொள்கிறது அதில் ஒன்றுதான் யூடியூப்.


யூடியூபிலும் நீங்கள் நகைச்சுவை திறன் இருக்கக்கூடிய வீடியோக்களை உருவாக்கி நாள் கண்டிப்பாக முன்னேற்றம் என்பது சாதாரணமாக நிகழ்ந்து விடும் என்பது உண்மைதான் ஆனால் நகைச்சுவையை எப்படி உருவாக்க போகிறீர்கள் என்பதுதான் இங்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை நான் உங்களுக்கு எளிய வழிகளை வைத்து கூறுகிறேன். தற்போதைய காலகட்டத்தில் நகைச்சுவை என்பது எங்கும் இருக்கும் ஒரு பகுதியாக மாறிவிட்டது இன்றைய சூழ்நிலையில் நமது நண்பர்கள் பேசும் பேச்சில் கூட நமக்கு நகைச்சுவை தட்டுப்படும். ஆகையால் நகைச்சுவை எங்கு வேணாலும் இருக்கும் அதை சரியான முறையில் தேவைப்படும் நபர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும்.


இதற்காக ஒரு முறையை நாம் பயன்படுத்தலாம் Omegle என சொல்லப்படும் தளமானது நமக்கு தெரியாத உலகத்தில் வேறு மூளையில் இருக்கக்கூடிய நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருகிறது நான் முன்னதாக கூறிய நண்பர்களிடம் கூட உங்களுக்கு நகைச்சுவை கிடைக்கும் என்று சொல்லி இருந்தேன் அதுபோல் Omegle என்று கூறப்படும் தளத்தில் உங்களுக்கான நண்பர்கள் ரொம்ப எளிதாக கிடைத்து விடுவார்கள் ஆனால் அந்த நண்பர்கள் தற்காலிக நண்பர்கள் என்பதை நீங்கள் மறந்து விடவேண்டாம் அவர்களது உரையாடல் பேச்சுகளை அல்லது நீங்கள் நகைச்சுவை காட்டி எதிரில் இருக்கும் அந்த தெரியாத தற்காலிக நபரை சிரிக்க வைத்து அதைக் கூட நீங்கள் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யலாம், இந்த முறையை எவ்வளவு சேனல்கள் பயன்படுத்தி இன்றைய காலகட்டத்தில் தலைசிறந்த ஒரு தனிநபர் ஊடகமாக விளங்கி வருகிறது.


இதற்கு சரியான எடுத்துக்காட்டு Azerrz எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள ஒரு யூடியூப் சேனல் இன்றைய சூழ்நிலையில் அமெரிக்கா மட்டுமல்ல ஆங்கிலம் தெரிந்த அனைத்து நாடுகளிலும் இந்த சேனலை பற்றி பேசாத நபர்கள் அல்லது பார்க்காத நபர்கள் யாருமே கிடையாது அவ்வளவு பிரசித்தி பெற்ற சிறந்த நகைச்சுவை திறன் இருக்கக்கூடிய ஒரு சில வீடியோக்களை உருவாக்கி வருகிறார்.


தெளிவாக சொல்லப்போனால் நகைச்சுவைக்கு ஒரு சின்ன மூலதனத்தையும் பயன்படுத்துகிறார் Azerrz சேனலை நடத்தும் நபர் அவரது தனிப்பட்ட திறனான குரல் உருவாக்கும் திறனை பயன்படுத்தி எதிரிலிருக்கும் மூன்றாவது நபரை அதாவது யார் என்று தெரியாத தற்காலிக நண்பரை சிரிக்க வைத்து அந்த சிரிப்பின் விளைவாக உருவாகக்கூடிய வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார். இன்றைய சூழ்நிலையில் அனைத்து பெரும்பாலான நபர்களுக்கும் இந்த சேனலை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கிறது இதற்கு காரணம் அவரது நகைச்சுவை திறன் என்று கூறலாம்.


அது போன்று நீங்களும் உங்களது நகைச்சுவை திறன்களை பயன்படுத்தி ஏதோ ஒரு மூன்றாவது நண்பரை அதாவது தற்காலிக நண்பரை உங்களது நகைச்சுவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் ரசிகர்களாக செய்து அதன் விளைவில் உருவாகும் வீடியோக்களை நீங்கள் யூடியூபில் பகிர்ந்து அதன் மூலம் உங்களது பார்வையாளர்களை யூடியூபில் சம்பாதிக்க முடியும்.


இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவைக்காக தான் எவ்வளவு நபர்கள் தேடி அலைகிறார்கள் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழிக்கு ஏற்ற ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள் ஆனால் நகைச்சுவைதான் கிடைக்க மாட்டேங்கிறது உங்களுக்கு நகைச்சுவை திறன் இருந்தால் நீங்கள் அந்த நோய் விட்டுப் போகும் வாழ்க்கையை மக்களுக்கு தர முடியும் அப்படி தரும் வகையில் உங்களது யூடியூப் சேனல்களை மேம்படுத்தி உங்களுக்கான ரசிகர்களையும் உருவாக்கமுடியும் செய்யும் வேலைக்கு சிறந்த கூலியாக உங்கள் சேனல் மேம்படும் நகைச்சுவை என்பது ஒரு வகையான மொழி கிடையாது அது திறன் இந்தத் திறனை வளர்த்துக் கொள்வது மிகவும் கடினம் ஒரு சிலருக்கு இயற்கையாக வரும் இன்னும் ஒரு சிலருக்கு பழக்கங்களாலும் சுபா வைத்தாலும் மிக எளிதாக எப்போதும் அவர்கள் பேசும் பேச்சிலேயே கலந்துவிடும்.


Omegle நகைச்சுவைத் திறன் மூலம் சம்பாதிக்க சிறந்த தளமாக மட்டுமே இல்லாமல் இன்னமும் எவ்வளவு வேலைகளை செய்து நீங்கள் Omegle பார்வையாளர்களை பயன்படுத்தி உங்களுக்கான யூடியூப் வீடியோக்களை எளிதில் உருவாக்கி கொள்ளலாம் இதற்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று பார்த்தால் எவ்வளவோ இசைக்கருவிகளை வாசிக்கும் நபர்கள் அவர்களது திறனைOmegle தளத்தில் வரக்கூடிய பார்வையாளர்களிடம் காண்பித்து அந்த பார்வையாளர்கள் வெளிப்படுத்தும் குணாதிசயத்தை அவர்களது சந்தோசத்தையும் வீடியோவாக எடுத்து யூடியூபில் கொடுக்கிறார்கள்.


ஆகையால் நகைச்சுவை இருந்தால் மட்டுமே உங்களால் Omegle  சம்பாதிக்க முடியும் என்பது கிடையாது உங்கள் திறமைகள் எதுவாக இருந்தாலும் சரி பார்வையாளர்களிடம் காண்பிக்கும் போது அவர்கள் சந்தோஷப்பட்டாலும் அல்லது இதர செயல்பாடுகளில் ஈடுபட்டு அதன் விளைவாக உருவாகும் வீடியோக்கள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் வித்தியாசம் என்பது பொழுதுபோக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் அதைக்கூட நீங்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்து உங்களுக்கான சிறந்த தளத்தை உங்களுக்கான சிறந்த ரசிகர்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்.


இது போகும் என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இடைப்பட்ட காலத்தில் நான் யூட்யூபில் எவ்வளவு வீடியோக்கள் இது சம்பந்தமாக பார்த்தேன் அதாவது Omegle பயன்படுத்தும் முறைகளைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டேன் அப்போது நான் கணித்த விஷயம் என்னவென்றால் Omegle பயன்படுத்தி ஒரு சில யூடியூப் கிரியேட்டர் பிராங்க் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் உண்மையில் ஒரு பிராங்க் வீடியோவை உருவாக்குவதாக இருந்தால் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு இருக்கும் நபர்களை தேவையில்லாமல் தொந்தரவு செய்வது போன்று பண்ணி அதன் விளைவாக உருவாகும் நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்கிறார்கள் அதை பின்னர் யூடியூப்பில் அப்லோடு செய்து சம்பாதிக்கிறார்கள் ஆனால் இந்த காரியத்தில் மிகவும் கடுமையான ரிஸ்க் இருக்கிறது காலப்போக்கில் இது பிரச்சனை உருவாகவும் வாய்ப்பு உண்டு ஆகையால் எவ்வளவு யூடியூப் கிரியேட்டர் Omegle பயன்படுத்தி அங்கிருக்கும் மக்களிடம் பிராங்க் செய்து அதன் விளைவில் உருவாகும் நிகழ்வுகளை யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார்கள் இதில் எந்த மாதிரியான லாபம் கிடைக்கிறது என்றால் நேரடியாக சென்று ஒரு அன்றாட வாழ்வில் இருக்கும் நபர்களை பிராங்க் வீடியோக்களில் ஒன்று நினைத்தாள் கண்டிப்பாக அடிதடி வரைக்கும் கூட போகலாம்


ஆனால் இங்கு Omegle ஒரு திரையின் சுவற்றில் ஒரு தெரியாத நபரிடம் நாம் பேசுவது போன்ற ஆகையால் நம்மால் பேசவோ பார்க்கவோ முடியுமே தவிர உணரவும் முடியாது அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள் பிரச்சனையை முடிந்த வரை தள்ளிப் போட்டுக் கொள்கிறார்கள் அவர்களுக்கு தேவையான வீடியோக்களை உருவாக்கி சிறப்பாக மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.


எங்களைப் போன்று நீங்களும் செய்யுங்கள் என்று கூறவரவில்லை உங்கள் இஷ்டத்திற்கு இதை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை யோசியுங்கள் உங்களுக்கான தளமாக இதை மாற்றிக்கொள்ள எப்படி பயன்படுத்துவது எந்த மாதிரியான புது வீடியோக்களை உருவாக்க முடியும் என்பதை தீர்மானியுங்கள். பின்னர் அதற்கான வேலைகளை இந்த தளத்தில் சென்று ஆயத்தம் செய்யுங்கள், யூடியூபில் இப்படிப்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்வதாக இருந்தால் அதற்கு விளம்பர பதிப்புரிமை கிடைக்குமா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் 100% விளம்பரம் கிடைக்கிறது இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை, இதை நான் இவ்வளவு உறுதியாக கூறுவதற்கு காரணம் என்னவென்றால் தற்போதைய சூழ்நிலையில் யூடியூபில் எவ்வளவு நபர்கள் இப்போது நான் உங்களுக்கு ஒரு சில எடுத்துக் கூறினேன் அல்லவா அதைப் போன்று இருக்கக்கூடிய எவ்வளவு சேனல்கள் சிறந்த முறையில் இன்றும் யூடியூபில் விளம்பர பதிப்புரிமையை பெற்று செயல்பட்டு வருகிறார்கள்.


அவர்களுக்கு இன்று வரைக்கும் எந்த ஒரு பிரச்சினை யூட்யூப்பில் இருந்து தரப்படவில்லை இப்படி பார்க்கும்போது கண்டிப்பாக உங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனால் வீடியோவாக உருவாக்கும் போது உங்கள் தற்காலிக நண்பரிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறி விடுங்கள் இப்படி நாங்கள் யூடியூபே வீடியோக்களை உருவாக்குகிறோம் அந்த வீடியோவானது யூட்யூபில் பகிரப்படும் உங்களுக்கு தனி உரிமை அடிப்படையில் உங்கள் முகம் காண்பிக்க வேண்டாம் அல்லது இந்த வீடியோவை யூடியூபில் கொடுக்காதீர்கள் என்று கூறிவிட்டாள் நாங்கள் செய்ய மாட்டோம் ஆனால் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாங்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்து கொள்வோம் என்று கூறி கேட்டு அனுமதி பெற்ற பின்னரே நீங்கள் உங்கள் வீடியோவை யூடியூபில் பகிரவும்.

Omegle

Post a Comment

0 Comments